பாவாணர்க்கு அஞ்சல்தலை
தி.மு.க.ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் சிறப்புக்குரிய பலருக்கும் அஞ்சல்தலை வெளியிடப்பட்டு
வந்தது. அவ்வரிசையில் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்க்கும் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட
வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் திருமிகு கி. வீரமணி அவர்களும், நடுவணரசு அமைச்சர்
மாண்புமிகு சி.கே. வாசன் அவர்களும் நடுவண் அரசுக்கு வேண்டுகோள் வைத்தார்கள். அதனை ஏற்றுக்கொண்ட
அன்றைய நடுவண் அமைச்சர் திருமிகு தயாநிதிமாறன் அவர்கள் முயற்சியால் கலைஞர் அருட்செல்வனார்
(கருணாநிதியார்) அவர்கள் தலைமையில் பாவாணர்க்குச் சிறப்பு அஞ்சல்தலை 18-2-2006 அன்று
வெளியிடப்பட்டது.
இந்திய அரசு பாவாணர்க்கு அஞ்சல்தலை வெளியிட்டதை யடுத்து, மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர் திருமிகு திருமாவளவன் அவர்களின் பெருமுயற்சியால் மலேசிய அரசு பாவாணர்க்கு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்புச் செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரிய செய்தியாகும்.